\
தொகுதிப் பங்கீடு:  அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!

தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!

தொகுதிப் பங்கீடு: அதிமுக - தமாகா இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை!
Published on

தொகுதிப் பங்கீடு தொடர்பாக அதிமுக - தமிழ் மாநில காங்கிரஸ் இடையே இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் 12 தொகுதிகள் வரை கேட்டுள்ளதாக கூறப்படுறது. இந்நிலையில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து இன்று தமிழ் மாநில காங்கிரஸ் தேர்தல் குழுவினர் அதிமுகவின் தேர்தல் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதனிடையே தேர்தல் பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும், அதிமுகவுக்கு ஆதரவளிக்கும் சிறிய கட்சிகளின் நிர்வாகிகளையும் இருவரும் சந்தித்து பேச உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com