\
விதிமுறைகள் படி நடந்திருக்கிறோம்: சாரண, சாரணியர் தேர்தல் அதிகாரி பதில்

விதிமுறைகள் படி நடந்திருக்கிறோம்: சாரண, சாரணியர் தேர்தல் அதிகாரி பதில்

விதிமுறைகள் படி நடந்திருக்கிறோம்: சாரண, சாரணியர் தேர்தல் அதிகாரி பதில்
Published on

சாரண சாரணியருக்கான தேர்தல் விதிமுறைகளின் படிதான் நடந்திருக்கிறது என தேர்தல் அதிகாரி கலாவதி விளக்கமளித்துள்ளார்.

தமிழக சாரண, சாரணியருக்கான தேர்தலில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா போட்டியிட்டார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. முறைப்படி இந்தத் தேர்தல் நடத்தப்பட்டவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் அவரது குற்றச்சாட்டுக்கு தேர்தல் அதிகாரி கலாவதி பதிலளித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், எங்களது ’பை லா’வில் என்ன உள்ளதோ அதை கொண்டுதான் தேர்தலை நாங்கள் நடத்தியுள்ளோம். எனவே விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை. இசி கூட்டத்தில் முறையாக அனுமதி பெற்று அதன் படி செயலாற்றியுள்ளோம். தேர்தல் குறித்த ஒவ்வொரு நகர்வையும் தேசிய தலைமைக்கு தெரியப்படுத்தியுள்ளோம் அவர் என்று கூறினார்.

குறிப்பிட்ட தேதிக்கு முன்பே தேர்தல் நடத்தப்பட்டுவிட்டதாக ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் 13ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வந்துள்ளது. அதன் படியே தேர்தல் நடந்துள்ளது என கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com