RoverWebTeam
டிரெண்டிங்
அடடா ஒரு குழந்தையை போல..! நிலவில் சுற்றி சுற்றி ஆய்வு செய்யும் ரோவர் - இஸ்ரோ வெளியிட்ட புதிய வீடியோ
நிலவின் தென் துருவத்தில், ரோவர் அழகாக ஊர்ந்து செல்லும் காட்சியை வெளியிட்டுள்ளது இஸ்ரோ. இந்த அழகான காட்சியை க்யூட்டாக படம்பிடித்து அனுப்பியுள்ளது லேண்டரிலுள்ள இமேஜர் கேமரா.
நிலவின் தென் துருவத்தில், ரோவர் அழகாக ஊர்ந்துசெல்லும் காட்சியை வெளியிட்டுள்ளது இஸ்ரோ. இந்த அழகான காட்சியை க்யூட்டாக படம்பிடித்து அனுப்பியுள்ளது லேண்டரிலுள்ள இமேஜர் கேமரா.
இதை ட்விட்டரில் பகிர்ந்துள்ள இஸ்ரோ, ‘அட, ஒரு குழந்தை அழகா நிலாவுல விளையாடுவது போன்ற உணர்வை இது தருதுல்ல..! அதை அந்த தாய் பாசத்தோட பார்த்தா... அப்படித்தானே இதுவும் இருக்கு..! உங்களுக்கு என்ன தோணுது?’ என்று பதிவிட்டுள்ளது.