100‌% வாக்குப்பதிவு : விழிப்பு‌‌ணர்வு ‌‌‌‌ஏற்படுத்து‌ம் ரோபோ

100‌% வாக்குப்பதிவு : விழிப்பு‌‌ணர்வு ‌‌‌‌ஏற்படுத்து‌ம் ரோபோ

100‌% வாக்குப்பதிவு : விழிப்பு‌‌ணர்வு ‌‌‌‌ஏற்படுத்து‌ம் ரோபோ
Published on

நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவை மாவட்ட‌ நிர்வாகம் சார்பில் ரோபோ மூ‌‌‌லம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கட்சிகள் ஒருபக்கம் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வரும் நிலையில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிளும், அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விதங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நூறு சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் ரோபோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் அதிகம் கூடும்‌ இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்த‌ ரோபோ தமிழ் மற்றும் ஆங்கி‌லத்தில் 100 சதவிதம் வாக்களிக்க வேண்டும் என கூறுகிறது. மேலும் ரோபோ வைத்து உள்ள கணிணி பலகை மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த‌ ரோபோவை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்வதுடன் செல்பியும் எடுத்து செல்கின்றனர்.

இந்த ரோபோ இந்தியாவிலேயே முதல் முறையாக வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உருவாக்கி உள்ளதாகவும், இதன் மூலம் வாக்குப்பதிவு அதிகமாகும் என நம்புவதாகவும் ரோபோவை உருவாக்கிய நிறுவனத்தினர் தெரிவித்தனர். கோவை மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பல்வேறு பகுதிகளில் இந்த ரோபோ வைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com