திருவாரூரில் இடைத் தேர்தல் நடத்தலாமா? - மாலைக்குள் ஆட்சியர் அறிக்கை

திருவாரூரில் இடைத் தேர்தல் நடத்தலாமா? - மாலைக்குள் ஆட்சியர் அறிக்கை
திருவாரூரில் இடைத் தேர்தல் நடத்தலாமா? - மாலைக்குள் ஆட்சியர் அறிக்கை

திருவாரூரில் இடைத் தேர்தலை நடத்துவது குறித்து நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டம் தொடர்பான அறிக்கை, பிற்பகல் 3 மணிக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த முடியுமா? முடியாதா? என ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ நேற்று உத்தரவிட்டார். கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் டி.ராஜா தொடர்ந்த மனுவை குறிப்பிட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், திருவாரூரில் தேர்தலை நடத்துவது குறித்து அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொண்டது. இதுதொடர்பாக திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் கட்சிகளின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிமுக, திமுக, சிபிஎம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தேர்தல் நடத்துவது பற்றிய அறிக்கையை மாலைக்குள் தர அதிகாரி உத்தரவிட்ட நிலையில், ஆட்சியர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், புயல் நிவாரணப் பணிகள் நிறைவடைந்த பின் தேர்தல் நடத்தலாம் என கட்சிகள் வலியுறுத்தின. நாடாளுமன்றத் தேர்தலுடன் திருவாரூர் தொகுதிக்கும் இடைத்தேர்தலை நடத்தலாம் எனவும் கட்சிகள் கருத்து தெரிவித்தன. கூட்டத்திற்குப் பின் பேசிய திமுக முன்னாள் எம்.பி. விஜயன், ‘தேர்தலை சந்திக்க திமுக தயாராக உள்ளது. எனினும் புயல் நிவாரணப் பணி முழுமையாக நடைபெற வேண்டும்’ என்று கூறினார்.

இந்நிலையில், திருவாரூர் அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்த அறிக்கை பிற்பகல் 3 மணிக்கு அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையருக்கு திருவாரூர் ஆட்சியர் அறிக்கை அனுப்ப உள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com