விளையாட்டு வினையானது.. எலி பேஸ்டை குளிர்பானத்தில் கலந்து குடித்த சிறுமிகள்.. நடந்தது என்ன?

விளையாட்டு வினையானது.. எலி பேஸ்டை குளிர்பானத்தில் கலந்து குடித்த சிறுமிகள்.. நடந்தது என்ன?

விளையாட்டு வினையானது.. எலி பேஸ்டை குளிர்பானத்தில் கலந்து குடித்த சிறுமிகள்.. நடந்தது என்ன?
Published on

தன்னை திட்டிய தாயாரை அச்சுறுத்த எலி பேஸ்டை குளிர்பானத்தில் கலந்து குடித்த 5 பள்ளி சிறுமிகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.

தாயார் திட்டியதால் கோபமடைந்த சிறுமி எலி பேஸ்டை குளிர்பானத்தில் கலந்து குடித்ததோடு தன்னுடைய நான்கு தோழிகளுக்கும் கொடுத்ததால். வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்த ‘கட்டாலங்குளம்’ என்ற கிராமத்தில், ஆர்த்தி பாண்டிச்செல்வி சுபிக்ஷா உள்ளிட்ட 10 மற்றும் 11,வயதுடைய ஐந்து சிறுமிகள் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது தன்னுடைய மகள் நிவேதா கடையிலிருக்கும் குளிர்பானத்தை எடுத்து அவளுடைய தோழிகளுக்கு கொடுத்து வந்ததால் தனது மகள் நிவேதாவை அவரது தாயார் திட்டியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த நிவேதா எலி பேஸ்ட்டை குளிர்பானத்தில் கலந்து குடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த அவளது தோழிகள் நிவேதா கையில் வைத்திருந்து (எலி பேஸ்ட் கலந்திருப்பது அறியாமல்) குளிர்பானத்தை வாங்கி நாளுபேரும் குடித்துள்ளனர்.

இதனையடுத்து நிவேதா வாந்தி எடுக்கவே பயந்துபோன தோழிகள் என்னவென்று கேட்டதற்கு, குளிர்பானத்தில் எலி பேஸ்ட் கலந்திருப்பதாக கூறியுள்ளார். இதைக்கேட்ட சிறுமிகள் அச்சத்தால் அழுதுள்ளனர். சப்தம் கேட்டு அங்கு வந்தவர்களிடம் நடந்ததை கூறிய சிறுமிகள் மேலும் மூன்று பேருக்கு வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர்.

இதைப்பார்த்த அருகிலிருந்த பெற்றோர்கள் பதறியடித்து அவர்களை சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து மருத்துவமனை தரப்பில் கேட்ட போது எலி பேஸ்ட் குளிர்பானத்தில் கலந்து குடித்துள்ளனர். ஆதனால் ஆபத்து எதுவும் இல்லை. ஒவ்வாமையால் வாந்தி ஏற்பட்டுள்ளது. மேலும் உடனடியாக முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டதால் சிறுமிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றனர். இதுகுறித்து சாயல்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com