ரேசனில் பொருட்கள் வழங்க தாமதமானதால் ஊழியர்களை கடைக்குள் வைத்து பூட்டிய மக்கள்

ரேசனில் பொருட்கள் வழங்க தாமதமானதால் ஊழியர்களை கடைக்குள் வைத்து பூட்டிய மக்கள்

ரேசனில் பொருட்கள் வழங்க தாமதமானதால் ஊழியர்களை கடைக்குள் வைத்து பூட்டிய மக்கள்

ரேசன் பொருட்கள் வழங்க தாமதமானதால் கடை ஊழியரை ஒருமணி நேரம் கடைக்குள் வைத்து பொது மக்கள் பூட்டிவைத்தனர். 

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட சலவன்பேட் பகுதியில் உள்ள 2 ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று இலவச அரிசி வாங்க முதியோர்களும், மற்ற பொருட்களை வாங்க பொது மக்களும் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்தனர். அப்போது பயோமெட்ரிக் முறை சரியாக வேலை செய்யாததால் நீண்ட நேரம் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 

இதனால் வெயிலில் காத்துக்கொண்டிருந்த பொது மக்கள் மற்றும் முதியோர்கள் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து 2 கடை ஊழியர்களையும் கடையின் உள்ளே வைத்து சட்டரை சாத்தியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தெற்கு காவல் துறையினர் மற்றும் வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து கடையின் உள்ளே இருந்தவர்களை மீட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com