டிரெண்டிங்
”நிச்சயம் வெற்றி பெறுவேன்” - சென்னையில் பாஜக சார்பில் போட்டியிடும் திருநங்கை!
”நிச்சயம் வெற்றி பெறுவேன்” - சென்னையில் பாஜக சார்பில் போட்டியிடும் திருநங்கை!
சென்னை திரு.வி.க நகர் மண்டலத்துக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டுக்கு பாஜக சார்பில் திருநங்கை ஒருவர் போட்டியிடுகிறார்.
உள்ளாட்சி தேர்தலில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று 112 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டது. அந்தப் பட்டியலில் திரு.வி.க.நகர் மண்டலத்தில் வார்டு எண் 76ல் பாரதிய ஜனதா கட்சியில் பல ஆண்டுகளாக உறுப்பினராக இருக்கும் திருநங்கை ராஜம்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இவர் பாஜகவில் வட சென்னை மாவட்ட கலை, கலாச்சார பிரிவு மாவட்ட தலைவராக இருக்கிறார். முதல் முறையாக தான் தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர், வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே இலக்குடன் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.

