உசிலம்பட்டி: கிணற்றில் விழுந்த கர்ப்பிணி பசு உயிருடன் மீட்பு

உசிலம்பட்டி: கிணற்றில் விழுந்த கர்ப்பிணி பசு உயிருடன் மீட்பு
உசிலம்பட்டி: கிணற்றில் விழுந்த கர்ப்பிணி பசு உயிருடன் மீட்பு

உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த கர்ப்பமாக இருந்த பசுமாட்டை பத்திரமாக உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு கண்ணீர் மல்க மூதாட்டி நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் முருகன். விவசாயியான இவர் தனது 5 மாத கருவுற்றிருந்த பசுமாட்டை மேய்ச்சலுக்காக அவரது தொட்டத்தில் கட்டி வைத்து விட்டு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டத்தில் இருந்த கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்துவிட்டது. இதனையறிந்த கண்ணன் மற்றும் கிராம மக்கள் உசிலம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் தங்கம் மற்றும் முன்னணி தீயணைப்பு வீரர் வீரமணிகண்டன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் கிணற்றுக்குள் தவறி விழுந்த பசுமாட்டை இரண்டு மணிநேர போராட்டத்திற்கு பின் பொதுமக்கள் உதவியுடன் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

கர்ப்பமாக இருந்த பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு கண்ணீர்மல்க அதிகாரிகளின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார் முருகனின் தாயார் பாண்டியம்மாள் இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com