இரண்டரை பவுன் தங்க செயினுக்காக தனியாக வசித்த 52 வயது பெண் கொலை

இரண்டரை பவுன் தங்க செயினுக்காக தனியாக வசித்த 52 வயது பெண் கொலை

இரண்டரை பவுன் தங்க செயினுக்காக தனியாக வசித்த 52 வயது பெண் கொலை
Published on

ராமநாதபுரம் அருகே நகைக்காக பெண் கொலை? போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகேயுள்ள இரட்டை யூரணியைச் சேர்ந்தவர் காமராஜர். இவரது மனைவி விஜயராணி. இவர், உடலில் ரத்தக் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த உச்சிப்புளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர். விசாரணையில் விஜயராணி கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் தங்க செயின் மாயமானது தெரியவந்தது. மேலும் கழுத்து மற்றும் முகத்தில் காயங்கள் இருந்தது.

இந்நிலையில் அவர் அணிந்திருந்த ஜாக்ஜெட் கிழிக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இதனால் இக்கொலை நகைக்காக நடந்ததா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் நிகழ்ந்த வீட்டுக்கு அருகில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட காவல் கண்காணிப்பாளர், கார்த்திக், கொலைக்கான காரணம் குறித்து உச்சிப்புளி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து கன்னிராஜபுரம் ஜஸ் வியாபாரியைத்தேடி போலீசார் விரைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com