கட்டிய டவலோடு மெட்ரோ ரயிலில் சுற்றித்திரிந்த இளைஞர்... முற்றிய ரீல்ஸ் மோகம்!

கட்டிய டவலோடு மெட்ரோ ரயிலில் சுற்றித்திரிந்த இளைஞர்... முற்றிய ரீல்ஸ் மோகம்!
கட்டிய டவலோடு மெட்ரோ ரயிலில் சுற்றித்திரிந்த இளைஞர்... முற்றிய ரீல்ஸ் மோகம்!

டிக்டாக் தடைக்கு பிறகு இணையவாசிகள் மத்தியில் பெரிதும் பிரபலமாக இருப்பது இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடும் பழக்கம்தான். சின்னதாக எதாவது வீடியோ போட்டாலோ ஆயிரம், லட்சங்களில் வீயூஸ்கள் கிடைப்பதால் வேடிக்கையாக செய்வதாக நினைத்து பல விசித்திரமான செயல்களில் பலரும் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இன்ஸ்டாவிலுள்ள பல ரீல்ஸ்கள் நமக்கு சாட்சி!

அதுவும் பொது போக்குவரத்து இடங்களில் ஆடுவது, பாடுவதை தாண்டி காண்போரை முகம் சுழிக்கும் அளவுக்கான செயல்களிலும் பல இணையவாசிகள் ஈடுபடுவதை காணலாம். இப்படி இருக்கையில் டெல்லியில் உள்ள மெட்ரோ ரயிலில் இளைஞர் ஒருவர் பனியனும், இடுப்பில் டவல் மட்டும் அணிந்த படி ஒவ்வொரு பெட்டியிலும் உலா வருகிறார்.

தானொரு பொது இடத்தில் இருக்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் எந்த நிதானமும் இல்லாமல் அந்த இளைஞர் சாவகாசமாக மெட்ரோ ரயில் பெட்டிகளில் நடந்து செல்கிறார். இதனை அந்த இளைஞரின் நண்பரே வீடியோவாக எடுத்திருப்பார் போல தெரிகிறது. டவல் மட்டும் கட்டிக்கொண்டு சென்ற அந்த இளைஞரை கண்ட ரயிலில் இருந்த இதர பயணிகளுக்கு அது அசவுகரியத்தையே கொடுத்திருக்கும் என்பதை வீடியோவை பார்ப்பதன் மூலம் அறியலாம். சிலர் டவலில் சுற்றித் திரிந்த இளைஞனை கண்டு சத்தமாக சிரிக்கவும் செய்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ மோஹித் கவுர் என்பவரின் இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 20 லட்சத்துக்கும் மேலானோர் அந்த வீடியோவை பார்த்திருக்கிறார்கள். அந்த வீடியோவின் கேப்ஷனில் “வாட்டர் டேங்க் காலியாகிவிட்டது. நான் ஆஃபிஸிலேயே சென்று குளித்துக்கொள்கிறேன்” என இந்தியில் பதிவிடப்பட்டிருக்கிறது. இப்படி இதற்கு முன்னரேவும் மெட்ரோ மற்றும் பிற பொது இடங்களிலும்கூட விசித்திரமான செயல்களில் அந்த பயனர் ஈடுபட்டிருக்கிறார் என்பது அவரின் பழைய இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com