டிரெண்டிங்
சிபிஎம், சிபிஐ, வி.சி.க. ம.ம.க தலைவர்கள் ஆளுநரை இன்று சந்திக்கின்றனர்
சிபிஎம், சிபிஐ, வி.சி.க. ம.ம.க தலைவர்கள் ஆளுநரை இன்று சந்திக்கின்றனர்
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்கள் இன்று ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்கின்றனர்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிரு்ல்லா ஆகியோர் காலை 11 மணிக்கு ஆளுநரை சந்திக்கவுள்ளதாக ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார். முதல்வர் பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள், ஆளுநரிடம் கோரிக்கை விடுத்த நிலையில், தமிழக அரசியலில் பரபரப்பு நீடிக்கிறது. பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கனவே ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.