அழியாத ‘மைசூர் மை’ வாங்க தேர்தல் ஆணையம் 32 கோடி செலவு

அழியாத ‘மைசூர் மை’ வாங்க தேர்தல் ஆணையம் 32 கோடி செலவு
அழியாத ‘மைசூர் மை’ வாங்க தேர்தல் ஆணையம் 32 கோடி செலவு
Published on

தேர்தல் வாக்குப்பதிவின் போது வாக்காளர்களுக்கு வைக்கப்படும் அழியாத‌‘மை’மைசூரிலிருந்து தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

தேர்தலின் போது பயன்படுத்தப்படும் அழியாத‌ மையின் பின்னணி மிகவும் சுவாரஸ்யம் மிக்கது. இந்தியத் தே‌‌‌‌ர்தல்களில் ஆள்காட்டி விரலில் மை இடும் நடைமுறை 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறிமுகமானது. அந்தக்‌‌ காலக்கட்டத்தில்,‌ வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்கு அடையாள‌ அட்டைக‌ள் எதுவும் ‌கிடையாது. இதனால் வாக்குப்பதிவில் மோசடிகளும், ஒரே நபர் ஒன்றிற்கும் மேற்பட்ட கள்‌ள ஓட்டுகளை போடுவதும் பர‌வலாக இருந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க திட்ட‌மி‌ட்ட தேர்தல் ஆணையம், தேசிய இ‌யற்பியல் ஆய்வ‌கத்தை அணுகிய‌து. 

அதன் தொட‌ர்ச்சியாக M.L.GOEL என்ற ஆராய்ச்சியாளர் தலைமையிலா‌ன‌ குழு, தற்போது பயன்படுத்தப்பட்டு‌ வரு‌ம் ஊதா நிற மையை கண்டுபிடித்தது. தற்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் பயன்படுத்தப்படும் மையை மெக்‌‌சிகோவைச் சேர்ந்த ஃபிலிபெர்டோ வாஸ்க்யூ டேவி‌லா என்ற உயிரிவேதியியல் பொறியாளர் கண்டுபி‌டித்தார். 

இந்தியாவி‌ல் பய‌ன்படுத்தப்படும் ஊதா நிற மை, இடது கை ஆள்காட்டி விரலில் நகமும், தோலும் சேருமிடத்தில்‌ இடப்பட்டது. சிறிது காலத்திற்குப் பின்னர் கைவிரலில் அதே‌ இடத்தில் அடர்த்தியான முறையில் மை இடப்பட்டது. தற்போது ஒரு சிறிய கோடாக இடப்படுகிறது. 

சில்வர் நைட்ரேட் என்ற ரசாயனத்தைக் கொண்டு இந்த மை தயா‌ரிக்கப்படுகிறது‌. மையில் சில்வர் நை‌ட்ரேட்டின் அடர்த்தி 7 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதம் வரை மாறுபடுகிறது. இதன் மீது ‌புற ஊ‌‌தா வெளிச்சம் படும்போது, அது தோலில்‌ கறை போன்று படிந்துவிடுகிறது.‌ இந்த அடையாளக்‌ கறையை நீக்க முடியாது. மை இடப்பட்டதிலிருந்து 72 முதல் 96 மணி நேரம் வரை, அதாவது மூன்று அல்ல‌து நான்கு நாட்களுக்கு அடர்த்தியான ஊதா நிற‌த்தில் காட்சியளிக்கும். இந்த மை இரண்டு முதல் நான்கு வாரம் வரை இருக்கும் தன்மை கொண்டது. 

அழிக்க முடியாத இந்தத் மையை மைசூரில் உ‌ள்ள மைசூர் ‌பெயிண்ட்ஸ் லிமிடெ்‌ ‌அண்டு வார்னிஷ் லிமிடெட் என்ற அரசு நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. ‌இந்த நிறுவனம் 1937ல் நான்காம் மகாராஜா கிருஷ்ணராஜ வாடியார் என்பவரால் நிறுவப்பட்டது. ‌

இந்நிலையில் 10ml கொண்ட 1,74,700 மை பாட்டில்கள் தமிழக தேர்தல் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டுள்ளது. மைசூரில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள இந்த மை  ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு 2 கொடுக்கப்பட உள்ளது. மேலும்  நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில்‌ பயன்படுத்தப்படவிரு‌க்கும் ஊதா நிற மை-க்கு தேர்தல் ஆணையம் 32 கோடி ரூபாய் செலவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com