மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஐஜேகே, ச.ம.கட்சிக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஐஜேகே, ச.ம.கட்சிக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஐஜேகே, ச.ம.கட்சிக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி மற்றும் சமத்துவ மக்கள் கட்சிகளுக்கு தலா 40 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம், இந்திய ஜனநாயகக் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி அமைத்துள்ள கூட்டணியில், தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் நேற்றிரவு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி, இந்திய ஜனநாயக கட்சியும் சமத்துவ மக்கள் கட்சியும் தலா 40 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

சென்னையில் நடைபெற்ற தொகுதிப்பங்கீடு ஒப்பந்தத்தில் ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் சி.கே. குமரவேல் ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், தங்கள் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறினர். கூட்டணியின் பெயரை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவிக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com