கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பிரம்மாண்ட கேக் செய்யும் பணிகள் ஆரம்பம்
சிவகாசியில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான 10 டன் எடை கொண்ட பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை அடுத்த மாதம் 25ம் தேதி கொண்டாடப்படும் நிலையில் இதனை வரவேற்கும் விதமாக ப்ளம் கேக் தயாரிக்கும் பணிகள் சிவகாசியில் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தக் கேக்கை தயாரிக்க உலர் திராட்சை, முந்திரி, பேரிட்சை, செர்ரி உள்ளிட்ட 1500 கிலோ எடை கொண்ட பல வண்ண கலர்களை உள்ளடக்கிய கலவை பயன்படும் என்றும், இதன் மூலம் 10 டன் எடை கொண்ட மெகா வடிவ ப்ளேம் கேக் தயாரிக்கப்படும் என்றும் சமையல் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் பாரம்பரியமிக்க இந்த கேக், தரமானதாகவும் அதிக சுவையுடையதாகவும் தயாரிக்கப்படும் என்று உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் வாங்கி உண்ணும் அளவிற்கு சிறப்புமிக்க இந்த கேக் நியாயமான விலைக்கு விற்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.