உ.பி: நான்காம் கட்ட தேர்தல்; மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

உ.பி: நான்காம் கட்ட தேர்தல்; மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
உ.பி: நான்காம் கட்ட தேர்தல்; மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் இதுவரை மூன்று கட்டத்தேர்தல் முடிந்துள்ள நிலையில், இன்று 59 தொகுதிகளில் நான்காம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. 624 வேட்பாளர்கள் இத்தேர்தல் களத்தில் உள்ளனர்.

பிலிபித், லக்கிம்பூர் கேரி, சீதாபூர், ஹர்தோய், உன்னாவ், லக்னோ, ரே பரேலி, பண்டா, ஃபதேபூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிகிறது.

உத்தரப்பிரதேச சட்ட அமைச்சர் பிரிஜேஷ் பத்தக், சமாஜ்வாதி வேட்பாளர் சுரேந்திர சிங் காந்தியை லக்னோ கன்டோன்மென்ட் தொகுதியில் எதிர்கொண்டுள்ளார். பத்தக், 2017 தேர்தலில் லக்னோ மத்திய தொகுதியில் வென்றிருந்தார்.

மற்றொரு அமைச்சர் அசுதோஷ் தாண்டன் லக்னோ கிழக்குத் தொகுதியில் சமாஜ்வாதி தேசிய செய்தித்தொடர்பாளர் அனுராக் பதாரியாவை எதிர்கொண்டுள்ளார். ரே பரேலி தொகுதி காங்கிரசின் கோட்டையாக கருதப்படும் நிலையில், அங்கு பாரதிய ஜனதா சார்பில் அதிதி சிங் போட்டியிடுகிறார். இவர் முன்பு காங்கிரசில் இருந்தவர்.

லக்கிம்பூரில் கார் ஏற்றி 4 விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவமும், அதன்பின்னர் வன்முறையிலும் 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், அந்த தொகுதி 4 ஆம் கட்டத்தில், தேர்தலை சந்திக்கிறது. இதேபோல கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த உன்னாவ் தொகுதியும் 4 ஆம் கட்டத்தில் வாக்குப்பதிவை சந்திக்கிறது.

4 ஆம் கட்டத் தேர்தல் நடைபெறும் 59 தொகுதிகளில் 2017 சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 51 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 4 தொகுதிகளை சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் 3 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தன. பாரதிய ஜனதா கூட்டணியில் அப்னா தள் சோனோலால் ஒரு தொகுதியை வென்றிருந்தது.

இதையும் படிக்க: "ஹிஜாப் அணிவது 25-வது சட்டப்பிரிவின் கீழ் வராது" - கர்நாடக நீதிமன்றத்தில் தொடரும் விசாரணை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com