கிருஷ்ணரின் புல்லாங்குழல்தான் அதிமுக கையில் உள்ளது - பன்னீர்செல்வம்
கிருஷ்ணரின் கையில் உள்ள புல்லாங்குழல்தான் அதிமுக கையில் உள்ளது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், பாலாறு பிரச்னையில், சட்டரீதியாகவும், பேச்சு ரீதியாகவும் அடைந்த படுதோல்வியை மறைக்க, பாஜகவின் ஊது குழலாக மாறி, அக்கட்சியின் அறிவிக்கப்படாத மாநில தலைவராகியிருக்கிறார் எடப்பாடி என விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், பாஜகவின் ஊதுகுழலாக அதிமுக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்தார்.
அதாவது, ஊதுகுழலில் 2 வகை உண்டு, ஒன்று அடுப்பில் வைத்து ஊதுவது, மற்றொன்று கிருஷ்ணரின் கையில் உள்ள புல்லாங்குழல். அதுதான் அதிமுக கையில் உள்ளது என தெரிவித்தார்.
மேலும், 234 தொகுதிகளிலும் எந்தவித பாகுபாடின்றி மக்கள் திட்டங்களை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருவதாகவும் சிலர் அரசியல் லாபம் கருதி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருவது கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டார்.