\
பழனியில் தோட்டத்தில் சுற்றிய  6 அடி நீள மலைப்பாம்பு: வனத்தில் விட்ட தீயணைப்புத் துறையினர்.

பழனியில் தோட்டத்தில் சுற்றிய 6 அடி நீள மலைப்பாம்பு: வனத்தில் விட்ட தீயணைப்புத் துறையினர்.

பழனியில் தோட்டத்தில் சுற்றிய 6 அடி நீள மலைப்பாம்பு: வனத்தில் விட்ட தீயணைப்புத் துறையினர்.
Published on

பழனியில் தோட்டத்திற்குள் சுற்றித் திரிந்த 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் அய்யனாரப்பன் கோயில் உள்ளது. இதன் அருகே சிவானந்தம் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு புதர்களில் இருந்து மலைப்பாம்பு ஒன்று சுற்றிவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சிவானந்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் புதருக்குள் சுற்றிவந்த மலைப்பாம்பை பிடித்தனர்.

சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போராடி பிடிபட்ட 6 அடி நீளமிருந்த மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறை அதிகாரிகள் கொடைக்கானல் வனச்சரகத்தில் அடர்ந்த வனபகுதியில் மலைப்பாம்பை கொண்டு சென்று விட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com