பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் மீதான புகார்கள்  : தேர்தல் ஆணையம் இன்று முடிவு

பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் மீதான புகார்கள் : தேர்தல் ஆணையம் இன்று முடிவு

பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் மீதான புகார்கள் : தேர்தல் ஆணையம் இன்று முடிவு
Published on

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக நரேந்திர மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆகியோர் மீது எழுந்த புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் இன்று முடிவை அறிவிக்கின்றது.

மகாராஷ்டிராவில் தேர்தல் பரப்புரையின்போது பேசிய பிரதமர் மோடி, முதன் முறை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை, பாகிஸ்தானின் பாலக்கோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதாக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதேபோல், மேற்கு வங்கத்தில் தேர்தல் கூட்டத்தில் பேசிய பாரதிய ஜனதா தேசியத் தலைவர் அமித் ஷா, இந்திய பாதுகாப்புப் படை வீரர்களை மோடியின் படை என்று குறிப்பிட்டதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இவர்கள் தவிர, ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று ராகுல் காந்தி பேசிய விவகாரமும் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளது. இந்த மூவர் மீதான புகார்கள் குறித்தும் தேர்தல் ஆணையம் இன்று மாலை முடிவை அறிவிக்கும் என்று துணை தேர்தல் ஆணையர் சந்திர பூஷண் குமார் டெல்லியில் நேற்று தெரிவித்தார். இதனிடையே, பாதுகாப்புப் படையினரின் உயிர் தியாகங்களை பிரதமர் மோடியும், பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷாவும் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை தடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் எம்பி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவும் இன்று விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com