பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவின் வேஷம் கலைந்துவிட்டது: ஓபிஎஸ்

பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவின் வேஷம் கலைந்துவிட்டது: ஓபிஎஸ்
பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவின் வேஷம் கலைந்துவிட்டது: ஓபிஎஸ்

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியை. எல்லோரும் பாராட்டினார்கள். இந்த 10 மாதத்தில் திமுக வேஷம் கலைந்துவிட்டது. என கரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார் அப்போது...

1972-ல் அதிமுகவை தொண்டர்களின் இயக்கமாக உருவாக்கி 3 முறை ஆட்சி நடத்தி சத்துணவு திட்டம் போன்ற சாதனை திட்டத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர். பின்பு ஜெயலலிதா 16 ஆண்டுகாலம் தொலை நோக்கு திட்டங்களை உருவாக்கியவர். 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த வரலாறு அதிமுகவுக்கு மட்டுமே உள்ளது.

தேசிய அளவில் உயர் கல்வி 24 சதவிகிதமாக இருந்தது அது ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 52 சதமாக ஆக உயர்ந்தது. காவிரி பிரச்னையில் இறுதி தீர்ப்பை போராடி மத்திய அரசிதழில் பெற்றுத் தந்தவர் ஜெயலலிதா. 3 ஆம் முறையாக அதிமுக ஆட்சி கட்டிலில் அமரும் சூழ்நிலை இருந்தது. ஆனால், திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சியை பிடித்தது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு விலக்குக்கான முதல் கையெழுத்து என்றார்கள் செய்தார்களா... திமுக கையாலாகாத அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பை பார்த்து நாடே சிரிக்குது. நாங்கள் பொங்கல் பரிசுடன் 2,500 கொடுத்தோம். இப்போது நயாபைசா கூட இந்த அரசால் கொடுக்க முடியவில்லை.

பொங்கல் பரிசு குறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன், பொருள்கள் தரமற்றவை என அறிக்கை கொடுத்துள்ளது. ராஜினாமா செய்து விடுவார்களா... எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கு யார் துரோகம் செய்தாலும் அதன் பலனை அனுபவிப்பார்கள்.

அதிமுகவில் சாதாரண தொண்டன் ஒருங்கிணைப்பாளராக, முதல்வராக வர முடியும். வேறு கட்சியில் வரமுடியுமா. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியை மக்கள் பாராட்டுகின்றனர். ஆனால், இந்த 10 மாதத்தில் திமுக வேஷம் கலைந்துவிட்டது. பொய்யான வாகக்குறுதிகளை நம்பி திமுகவுக்கு வாக்களித்தார்கள் இப்போது அனுபவித்து கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com