\
வாக்கிடாக்கி விவகாரத்தில் தவறு செய்தது திமுகதான்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

வாக்கிடாக்கி விவகாரத்தில் தவறு செய்தது திமுகதான்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

வாக்கிடாக்கி விவகாரத்தில் தவறு செய்தது திமுகதான்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு
Published on

வாக்கிடாக்கி வாங்கியதிலும், அதற்கான டவர் அமைத்ததிலும் தவறு செய்தது திமுகதான் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட டவர்கள் முற்றிலும் சேதமடைந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் வாக்கிடாக்கி வாங்கியதில் அதிமுக ஆட்சியில் ஊழல் நிகழந்துள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி வருவதற்கு மறுப்பு தெரிவித்த ஜெயக்குமார், விரைவில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். 

அதேபோல் இராமேஸ்வரத்தில் சேதமடைந்த டவர்களை சரி செய்து, முழுவதுமாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது அதிமுக ஆட்சிதான் என்றும், ஊழல் செய்தவர்கள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 
 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com