\
நான்கு இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

நான்கு இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு திமுக பொறுப்பாளர்கள் நியமனம்

நான்கு இடைத்தேர்தல் தொகுதிகளுக்கு திமுக பொறுப்பாளர்கள் நியமனம்
Published on

அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பொறுப்பாளர்களை திமுக நியமித்துள்ளது.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அங்கே தேர்தல் பணிகளை மேற்கொள்ளவுள்ள பொறுப்பாளர்களையும் அக்கட்சி தற்போது அறிவித்துள்ளது. 

ஓட்டப்பிடாரம் தொகுதி பொறுப்பாளர்களாக கே.என்.நேரு, கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, தங்கம் தென்ன‌ரசு உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் க.பொன்முடியும், சூலூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com