என்னா நடிப்பு இது! சிறுத்தை, கழுதை புலியை ஏமாற்றி மயிரிழையில் உயிர் தப்பிய மான்
தன்னை வேட்டையாட முனைந்த புலி, கழுதைப்புலியிடமிருந்து மான் ஒன்று நடித்து தப்பித்து ஓடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வேட்டையாடுவதில் கில்லியான புலியிடம் சிக்கிய விலங்குகள் பெரும்பாலும் தப்பிப்பதே இல்லை. குறிப்பாக, மான்கள் சிக்கினால் புலிகளுக்கு மாமிசம்தான். அதுவும், புலியோடு கழுதைப்புலியும் சேர்ந்து கவ்விக்கொண்டால் மான் நிலைமை சின்னாபின்னம்தான். ஆனால், புலி மற்றும் கழுதைப்புலியிடம் சிக்கிய மான் ஒன்று உயிரற்று இருப்பதுபோல் நடித்து தப்பித்து ஓடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.
இந்திய வனத்துறை அதிகாரி Susanta Nanda பகிர்ந்துள்ள வீடியோவில், “ தன்னிடம் சிக்கிய மானை ஆக்ரோஷமாக பாய்ந்து கடிக்கிறது புலி. திடிரென்று அங்கு வரும் கழுதைப்புலி புலியை துரத்திவிட்டு மானை உண்ணத் துடிக்கிறது. எங்கு புலி வந்துவிடுமோ என்று மான் உயிரற்று இருக்கிறது என்று நினைத்து புலியை விரட்டச் செல்கிறது. கண்ணிமைக்கும் அந்தக் கேப்பில் நாம் இறந்துவிட்டதாக நினைத்த மான் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் எடுக்கிறது. பார்ப்பவர்களை நெகிழ்ச்சியூட்டும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மானின் நடிப்புக்கு ஆஸ்காரே கொடுக்கவேண்டும் என்று பலர் பாராட்டி வருகிறார்கள்.