₹1.9 கோடி செலவிட்டும் பயனில்லை.. கண்களையும் விட்டு வைக்கல.. வேலையின்றி திண்டாடும் மாடல்!

₹1.9 கோடி செலவிட்டும் பயனில்லை.. கண்களையும் விட்டு வைக்கல.. வேலையின்றி திண்டாடும் மாடல்!
₹1.9 கோடி செலவிட்டும் பயனில்லை.. கண்களையும் விட்டு வைக்கல.. வேலையின்றி திண்டாடும் மாடல்!

டாட்டூ போட்டுக் கொள்ளும் பழக்கம் தற்போது பலரிடத்திலும் சாதாரணமான செயலாகிவிட்டது. பச்சைக் குத்திக்கொள்ளும் பழக்கம் காலம் காலமாக இருந்து வந்தாலும் இடைப்பட்ட காலத்தில் இது அத்தனை பிரபலமாக இருக்கவில்லை.

ஏனெனில், டிசைன் டிசைனாக டாட்டூ போட்டுக் கொள்பவர்கள் விமான நிலையம், கல்வி நிலையம், அரசு வேலை போன்றவற்றில் அனுமதிக்கப்படாமல் இருந்தார்கள். ஆனால் காலம் மாற மாற கை கால்கள் மட்டுமல்லாமல் உடலின் அனைத்து பாகங்களிலும் பச்சைக் குத்திக் கொள்கிறார்கள்.

அப்படி உடல் முழுக்க டாட்டூ போட்டுக் கொள்வதால் பின்னாளில் வருத்தப்படவும் செய்கிறார்கள். அந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாடல் அழகி ஆம்பர் லூக்-ம் இணைந்துள்ளார்.

கண் காது உட்பட ஆம்பரின் உடல் 98 சதவிகிதம் டாட்டூவால் நிரப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவின் டிராகன் கேர்ள் என அழைக்கப்படும் ஆம்பர் லூக் இதற்காக 2,00,000 பவுண்ட்ஸ் செலவிட்டிருக்கிறாராம். அதாவது 1 கோடியே 91 லட்சம் ரூபாய் அதன் மதிப்பாகும்.

27 வயதான ஆம்பர் லூக் தனக்கு பிடித்த மாதிரி தனித்துவமான முறையில் டாட்டூ குத்திக் கொண்டிருந்தாலும் தற்போது அதனால் அவர் புறக்கணிக்கப்படுவதாகவும், தன் மீது பாகுபாடு காட்டப்படுவதாகவும் தன்னுடைய உள்ளக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பிரிஸ்பேனின் ரேடியோ நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ஆம்பர் லூக், “நான் மிகவும் அதிகமாக பச்சை குத்திக் கொண்டிருக்கிறேன், ஆனால் நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை.

ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துகளை கூற உரிமையுண்டுதான். ஆனால் மக்கள் பொது வெளியில் கருணையற்ற கருத்துகளை வெளியிடும் போது அது வேதனையாக இருக்கிறது. குறிப்பாக டாட்டூ போட்டுக்கொண்டு தன் தோற்றத்தை அழித்துவிட்டாள் என்று அவர்கள் கூறும்போது வருத்தமளிக்கிறது.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இந்த தோற்றத்தால் எனக்கு வேலை கிடைப்பதில் சிரமமாகத்தான் உள்ளது. ஆனால் இந்த டாட்டூக்களின் மீது சுகர் கோட் செய்யப் போவதில்லை. அது எனது வேலைவாய்ப்பு போன்ற விருப்பங்களை மட்டுப்படுத்தியிருந்தாலும் பரவாயில்லை” என்று லூக் கூறியிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com