\
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார்... எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதி இருவர் பலி

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார்... எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதி இருவர் பலி

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார்... எதிரே வந்த காருடன் நேருக்கு நேர் மோதி இருவர் பலி
Published on

திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி, படுகாயம் அ;டைந்த 4 பேர் பெரம்பலூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தம் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற காரில் ஐந்து பேர் பயணம் செய்தனர். சென்னை மார்க்கத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு கட்டைகள் மீது ஏறி எதிரே பாண்டிச்சேரி நோக்கி சென்ற காரின் மீது நேருக்கு நேர் மோதியதில் பாண்டிச்சேரியை சேர்ந்த ரகு மற்றும் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அவர்களுடன் பயணம் செய்த 3 பேர் மற்றும் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் உட்பட நால்வர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த ராமநத்தம் காவல் துறையினர் விபத்தில் இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com