\
"காலில் விழ வேண்டாம்" என கூறிய மோடி ! கேட்காத வேட்பாளர்கள்

"காலில் விழ வேண்டாம்" என கூறிய மோடி ! கேட்காத வேட்பாளர்கள்

"காலில் விழ வேண்டாம்" என கூறிய மோடி ! கேட்காத வேட்பாளர்கள்
Published on

காலில் விழ வேண்டாம் என பிரதமர் கேட்டுக்கொண்டபோதிலும், பிரதமரின் காலில் விழுந்து வேட்பாளர்கள் ஆசி பெற்றனர்

மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, தேனி ஆண்டிப்பட்டி அருகே நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மக்களவைத் தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசினார். 

பிரசார மேடையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி ‌மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார், பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். தேனி ஆண்டிப்பட்டி அருகே நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரதமருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துப் பெற்ற ரவீந்திரநாத் பிரதமரின் காலில் விழுந்தார். 

கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சில வேட்பாளர்களும் மோடியின் காலி விழுந்து ஆசி பெற்றனர். காலில் விழ வேண்டாம் என பிரதமர் அன்புடன் கேட்டுக்கொண்டபோதிலும், வேட்பாளர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

வீடியோ:

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com