\
தாலி கட்டிய கையோடு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் பரப்புரையில் ஈடுபட்ட மணமக்கள்

தாலி கட்டிய கையோடு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் பரப்புரையில் ஈடுபட்ட மணமக்கள்

தாலி கட்டிய கையோடு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் பரப்புரையில் ஈடுபட்ட மணமக்கள்
Published on

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதிதாக திருமணம் செய்து கொண்ட மணமக்கள், தாலிகட்டிய கையோடு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பரப்புரையில் கலந்து கொண்டனர். மணமக்களை வாழ்த்திய அமைச்சர், அவர்களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ராஜபாளையம் புதிய பேருந்துநிலையம் அடுத்த அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். இவருக்கும் மதுமிதா என்பவருக்கும் இன்று காலை பாலமுருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. அதே நேரம் அண்ணா நகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரப்புரை செய்ய வந்ததால், மாலையுடன் தாலி கட்டிய கையோடு மணமக்கள் பரப்புரையில் கலந்து கொண்டனர்.

அங்கு வந்த அமைச்சர் மணமக்களை வாழ்த்தி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com