\
நெல்லை: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் பைக் மெக்கானிக் கைது!

நெல்லை: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் பைக் மெக்கானிக் கைது!

நெல்லை: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் பைக் மெக்கானிக் கைது!
Published on

நெல்லை அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைக் மெக்கானிக் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் பணகுடி கோயில் விளையைச் சேர்ந்தவர் மாணிக்கராஜ் (வயது 21). இவர் அப்பகுதியில் உள்ள டூவீலர் ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் பக்கத்து தெருவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் சிறுமியின் பெற்றோர், மாணிக்கராஜ் மீது வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகார் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரித்ததில் சிறுமிக்கு மாணிக்கராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com