கட்டுரை விவகாரம் அதிமுகவின் முடிவு அல்ல: அம்மா நாளிதழில் விளக்கம்

கட்டுரை விவகாரம் அதிமுகவின் முடிவு அல்ல: அம்மா நாளிதழில் விளக்கம்
கட்டுரை விவகாரம் அதிமுகவின் முடிவு அல்ல: அம்மா நாளிதழில் விளக்கம்

அதிமுக - பாஜக உறவு தொடர்பாக, நமது அம்மா நாளிதழில் வெளியான கட்டுரையில், கட்டுரையாளரின் நோக்கம் பிறழ்ந்து உணர்ந்து கொள்ளப்பட்டு குதர்க்கமாக்கப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது அம்மா நாளிதழில் கடந்த 22ஆம் தேதி, திமுக நடத்தும் போராட்டங்கள் காவிரிக்காக அல்ல, மத்திய மாநில அரசுகளின் ஒற்றுமையை சீர்குலைக்கவே என்ற தலைப்பிடப்பட்ட கட்டுரை வெளியானது. அதில் மத்திய- மாநில அரசுகள் இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்ததால், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணியா என்ற விவாதம் எழுந்தது. இந்த நிலையில் நமது அம்மா நாளிதழ், கட்டுரை குறித்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது. 

அதில், பாஜக அதிமுக இடையிலான அரசியல் கூட்டணியை நமது அம்மா நாளிதழோ அதில் வெளியாகும் கட்டுரைகளோ முடிவு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவுப்புகளின்றி, நாளிதழில் வெளியாகும் கட்டுரையாளர்களின் சொந்த கருத்துகள் கட்சியின் முடிவுகளை பிரதிபலிப்பவை அல்ல என விளக்கப்பட்டுள்ளது. 

மேலும் மத்தியில் ஆளும் அரசோடு இணக்கத்துடன் செயல்பட்டு தமிழகத்தின் நலன்களை பெருக்கிக் கொள்வது என்ற எம்ஜிஆரின் நல்லுறவு அரசியலை முன்னெடுப்பதே காவிரி விவகாரத்தில் நல்லதொரு தீர்வை தரும் என்றும் இதனை குறிப்பிடவே மத்திய மாநில அரசுகள் இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயல்படுவதாக கட்டுரையாளர் சுட்டிக்காட்டி இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கருத்து பிறழ்ந்து உணர்ந்து , குதர்க்கமாக்கப்பட்டுள்ளதாக அந்த நாளிதழ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற குழப்பங்களுக்கு வித்திடும் வகையிலான கட்டுரையை பிரசுரித்ததற்காக உரியவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com