டிரெண்டிங்
“தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி” - வி.பி.துரைசாமி
“தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி” - வி.பி.துரைசாமி
தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி என அக்கட்சியின் மாநில துணத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணிதான் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும். பாஜகவுடன் எந்த கட்சி அனுசரித்து போகிறதோ அந்த கட்சியுடன்தான் கூட்டணி வைக்கப்படும். தமிழகத்தில் அதிமுக vs திமுக என இருந்தது. இப்போது திமுக vs பாஜக என மாறியுள்ளது” எனத் தெரிவித்தார்.
கடந்த தேர்தல்களில் அதிமுகவுடனான கூட்டணியில் பாஜக இணைந்து போட்டியிட்டது. இந்நிலையில் வி.பி துரைசாமியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.