"உள்ளூர் காரருக்கு வாய்ப்பளியுங்கள்” - துறையூரில் அதிமுக தொண்டர்கள் போராட்டம்

"உள்ளூர் காரருக்கு வாய்ப்பளியுங்கள்” - துறையூரில் அதிமுக தொண்டர்கள் போராட்டம்
"உள்ளூர் காரருக்கு வாய்ப்பளியுங்கள்” - துறையூரில் அதிமுக தொண்டர்கள் போராட்டம்

திருச்சி மாவட்டம் துறையூர் தனித் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திராகாந்தியை மாற்றக்கோரி ஒரு பிரிவு தொண்டர்கள் துறையூர் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிமுக சட்டப்பேரவை வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், துறையூர் தனித் தொகுதி வேட்பாளராக இந்திராகாந்தி என்பவர் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், இந்திராகாந்தி துறையூர் தனித் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவின் ஒரு பிரிவு தொண்டர்கள் துறையூர் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்கள் அதிமுக தலைமையை கண்டித்தும் உள்ளூர்காரரை வேட்பாளராக அறிவிக்க வேண்டம் எனக் கோரியும், மாற்று வேட்பாளரை மாற்று என்று கோஷமிட்டு சாலைமறியல் செய்தனர். இந்த மறியலில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதனால் துறையூர் பேருந்து நிலையம் பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியல் செய்வது சட்டத்திற்குப் புறம்பானது என சொன்னதை அடுத்து அதிமுக தொண்டர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com