மேற்கு வங்கத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல்; நந்திகிராம் தொகுதியில் 144 தடை உத்தரவு!
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு துவங்கியுள்ளநிலையில், மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
முதல் கட்ட வாக்குப் பதிவின்போது குண்டுவெடிப்பு, வாக்குச்சாவடி மையங்கள் கைப்பற்றுதல் போன்ற சம்பவங்கள் நடந்ததால், 2 ஆம் கட்டத் தேர்தலுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 30 தொகுதிகளுக்கு நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜியை எதிர்த்து, பாஜக சார்பில், திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் மூத்தத்தலைவர் சுவெந்து களத்தில் உள்ளார். இந்தத் தொகுதியில் வரும் 2ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்காக சுமார் 800 கம்பெனி மத்திய படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்கு துவங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது.