“இதுதான் என் ஆட்டம்”- கூடைப்பந்தில் கெத்து காட்டிய ஒபாமா... வைரல் வீடியோ

“இதுதான் என் ஆட்டம்”- கூடைப்பந்தில் கெத்து காட்டிய ஒபாமா... வைரல் வீடியோ
“இதுதான் என் ஆட்டம்”- கூடைப்பந்தில் கெத்து காட்டிய ஒபாமா... வைரல் வீடியோ

அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபரும், தற்போதைய ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான ஜோ பைடனுடன் மெக்ஸிகன் பிரச்சாரத்தில் அவருக்கு ஆதரவாகச் சென்றுள்ளார் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. அங்குள்ள ஒரு கூடைப்பந்து மைதானத்திற்குச் சென்ற அவர் குறிப்பிட்ட தூரத்தில் நின்று எந்த சலனமும் இல்லாமல் லகுவாக பந்தைக் கூடைக்குள் போடும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெறும் 20 நொடிகள் மட்டுமே வருகிற அந்த வீடியோவில், ‘இப்படித்தான் நான் செய்வேன்(That’s what I do)’ என்றுக் கூறிவிட்டு செல்கிறார். இந்த வீடியோவை 6 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். முதலில் இந்த வீடியோ பைடனின் பிரச்சார பயண டிஜிட்டல் இயக்குநரான ஒலிவியா ரைஸ்னரால் பகிரப்பட்டது. இந்த வீடியோவால் ஈர்க்கப்பட்ட அவர், ‘வேற லெவல்ல இருக்கு‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒபாமா தனது பள்ளிப்பருவத்திலிருந்து வெள்ளை மாளிகையில் அமரும்வரை தவறாமல் கூடைப்பந்து விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று சி.என்.என் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com