கல்வியை மாநிலப்பட்டியலில் கொண்டுவர மற்ற மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றுபடுத்தி அதிமுக செயல்படும் என அக்கட்சியின் எம்பி தம்பிதுரை கூறியுள்ளார்.
பெரியார் பிறந்த நாளையொட்டி, கரூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் பெரியார் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2016ஆம் ஆண்டு, முதலமைச்சர் ஜெயலலிதா கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து, மாநில பட்டியலுக்கு கொண்டுவர வலியுறுத்தி பேசியதன் அடிப்படையில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
நவோதயா பள்ளி எல்லா கிராமங்களுக்கும் வரப்போகிறதா, அந்தளவிற்கு நிதியுள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.