“டெபாசிட் இழந்த கட்சி திமுக” - தங்க தமிழ்செல்வன்

“டெபாசிட் இழந்த கட்சி திமுக” - தங்க தமிழ்செல்வன்
 “டெபாசிட் இழந்த கட்சி திமுக” - தங்க தமிழ்செல்வன்

ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்த திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு இல்லை என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்பு மதுரையில் இருக்கும் நட்சத்திர விடுதியில் திமுக தலைவர் ஸ்டாலினும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் சந்தித்து பேசியதாக கூறி அதிமுக அமைச்சர் உதயக்குமார் பரபரப்பை கிளப்பினார். 

மேலும் இருவரின் சந்திப்புக்கு பிறகே 18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு இல்லை என டிடிவி அறிவிப்பு வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டினார். 

இதற்கு டிடிவி தினகரன் மறுப்பு தெரிவித்ததோடு வேண்டுமென்றால் ஓட்டலில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கொள்ளுங்கள் எனவும் தெரிவித்தார். 

இதே போன்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், எதிர்க்கட்சி தலைவரும் வேறு கட்சி தலைவரும் ஒரே விமானத்தில் செல்ல கூடாதா? ஓட்டலில் தங்கக்கூடாதா எனவும் கேள்வி எழுப்பியிருந்தார். 

ஆனால் டிடிவி தினகரன் திமுகவுடன் கள்ளத்தொடர்பு வைத்து கொண்டு அதிமுகவை அழிக்க முடியாது என அதிமுகவின் சாடி வருகின்றனர். 

இந்நிலையில், அமமுகவை சேர்ந்த தங்க தமிழ்செல்வன் ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்த திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com