“மீண்டும் மோடியின் தலைமையில் ஆட்சி” - மனம் மாறிய தம்பிதுரை

“மீண்டும் மோடியின் தலைமையில் ஆட்சி” - மனம் மாறிய தம்பிதுரை

“மீண்டும் மோடியின் தலைமையில் ஆட்சி” - மனம் மாறிய தம்பிதுரை
Published on

“பாரதிய ஜனதாவை தூக்கி சுமக்க நாங்கள் தயாராக இல்லை எனவும் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா காலூன்ற முடியாது என்றும் தம்பிதுரை தெரிவித்திருந்தார். மேலும் பாஜகவை சுமந்து கொண்டு தமிழகத்தில் காலூன்ற வைக்க அதிமுக என்ன பாவம் செய்தது” என்றெல்லாம் பாஜகவை மக்களவை துணை சபாநயகர் தம்பிதுரை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி பகுதிகளில் இரண்டாம் கட்ட மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்ட மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை புதிய கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் பதிலளிக்கையில், “கட்சி கொள்கைகள் தனி, தேர்தல் கூட்டணி என்பது வேறு, அதிமுகவின் நோக்கம் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வர கூடாது என்பது. இது எம்.ஜி.ஆர், அம்மா காலத்திலிருந்தே எங்களது குறிக்கோள். அவர்கள் குடும்ப அரசியல் நடத்துவதால் திமுகவை வீழ்த்த வேண்டும். அவர்கள் வெற்றி பெறுவது நாட்டிற்கு நல்லதல்ல” என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர் தற்போதைய கூட்டணியில் தமிழ்நாட்டிற்கு பலன் கிடைக்கும். ஆட்சிக்கு மீண்டும் மோடி வர வாய்ப்பு உள்ளது. எதிர்க்கட்சிக்கு அந்த வழிவகை இல்லை எனக் கூறினார். மேலும் தற்போது கூட்டணியின் நோக்கம் 18 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த காங்கிரஸ்-திமுக கூட்டணி தமிழ்நாட்டிற்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை. இலங்கை தமிழர்களுக்கு அவர்கள் செய்த துரோத்திற்காகவே அந்த இயக்கம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே தேர்தல் கூட்டணியில் கொள்கை என்று அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com