நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களுடன் தம்பிதுரை சந்திப்பு
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை சந்தித்துப் பேசியுள்ளார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வங்கக்கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல் படை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக எழுந்த புகார் குறித்து, பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் தம்பிதுரை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரையும் தம்பிதுரை சந்தித்துப் பேசியுள்ளார்.
இதனிடையே, தமிழக விசைப்படகு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்தியக் கடலோரக் காவல் படையினருக்கு கண்டனம் தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடவும் மீனவ அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.