ஜெ.மரண விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை: தங்கதமிழ்ச்செல்வன்

ஜெ.மரண விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை: தங்கதமிழ்ச்செல்வன்

ஜெ.மரண விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை: தங்கதமிழ்ச்செல்வன்
Published on

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என தங்கத்தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற வளாகத்தில் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன்  பெற்ற தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் நிபந்தனையின்படி இன்று மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி இறுதி  நாள் கையெழுத்திட்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “உச்சநீதிமன்றம் காவரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டும் மத்திய அரசு அமைக்காதது கண்டிக்கத்தக்கது, மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.வாரியம் தொடர்பான தீர்ப்பில் ஸ்கீம் அல்லது மேலாண்மை வாரியம் என எந்த உத்தரவாக இருந்தாலும் அதை ஏன்  மத்திய அரசு செயல்படுத்தவில்லை? கர்நாடகாவில் தேர்தல் முடியாமல் எந்த வாரியமும் அமையாது” என்றார்.

மேலும் பேசுகையில், அதிமுக நிர்வாகிகள் நியமனத்தில் உள்ள குளறுபிடிகளால் மதுரையில் பிரச்னை வந்துள்ளது. அதிமுக  கட்டுப்பாட்டில் கட்சியும் இல்லை ஆட்சியும் இல்லை. மத்திய அரசு கட்டுப்பாட்டில்தான் அதிமுக உள்ளது.காவரி விவகாரத்தில் அனைவரும் சேர்ந்து போராட்டம் நடத்தி அழுத்தம் கொடுத்தால் தான் முடிவு பிறக்கும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் 

ஜெயலலிதாவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டதாக முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் கூறியிருப்பது உண்மைதான். ஆனால் ஒரு நபர் விசாரணை கமிஷனில் விசாரிக்கப்பட வேண்டிய அப்போதைய முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், மற்றும் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது பார்த்த வெங்கையாநாயுடு உள்ளிட்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். 
ஆனால் அவர்களை விசாரிக்கும் அதிகாரம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆணையத்திற்கு இல்லை. எனவேதான் சிபிஐ விசாரணை வேண்டும் என கேட்கிறோம் என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com