\
உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிப்பு

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிப்பு

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் பதவிக்காலம் நீட்டிப்பு
Published on

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது. 

உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்ட தனிஅதிகாரிகளின் பதவிக்காலம் ஜூன் 30ல் முடிவடைய இருந்த நிலையில், அவர்களின் பதவிக்காலத்தினை மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கும் மசோதா சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொண்டு வந்த அந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதையடுத்து மசோதாவானது ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார். தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவது தற்காலிகமே என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம் அளித்தார். உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்தாண்டு அக்டோபரில் முடிவடைந்த நிலையில், அவற்றை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.    
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com