மோடியை சந்தித்தார் சந்திர சேகர் ராவ் - பேசியது என்ன?

மோடியை சந்தித்தார் சந்திர சேகர் ராவ் - பேசியது என்ன?
மோடியை சந்தித்தார் சந்திர சேகர் ராவ் - பேசியது என்ன?

பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கானா முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திர சேகர் ராவ் சந்தித்தார். தெலுங்கானா முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடியை அவர் சந்திப்பது இதுவே முதன்முறை. 

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரை சந்தித்த பின்னர் கடந்த திங்கட்கிழமை இரவு சந்திர சேகர் ராவ் டெல்லி வந்தார். ‘கூட்டாட்சிக்கான கூட்டணி’ அமைக்கும் முயற்சியாக மேலும் சில அரசியல் தலைவர்களை சந்திக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை அடுத்த சில தினங்களில் அவர் சந்திக்கவுள்ளார். இதனிடையே, அடுத்த சில தினங்களில் ஐதராபாத் செல்லும் தான், சந்திரசேகர் ராவை சந்திக்கவுள்ளதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். 

இத்தகைய சூழலில் தான், பிரதமர் மோடி உடனான சந்திரசேகர் ராவ் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, தெலுங்கானவில் பின் தங்கிய 10 மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது, தெலுங்கானாவுக்கு தனி உயர்நீதிமன்றம் அமைப்பது, புதிய மாவட்டத்தில் கேந்திர வித்தியாலயா பள்ளி அமைப்பது, கரிம் நகரில் ஐஐடி அமைப்பது உள்ளிட்டவை குறித்து சந்திரசேகர் ராவ், மோடியிடம் ஆலோசனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கானா ராஷ்டிர சமிதி பாஜகவின் பி டீம் என காங்கிரஸ் விமர்சித்து வரும் நிலையில், இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com