சந்திரசேகர் ராவ் ஆட்சியில் தெலுங்கானா பின்னோக்கி சென்றுவிட்டது - சோனியா பேச்சு

சந்திரசேகர் ராவ் ஆட்சியில் தெலுங்கானா பின்னோக்கி சென்றுவிட்டது - சோனியா பேச்சு
சந்திரசேகர் ராவ் ஆட்சியில் தெலுங்கானா பின்னோக்கி சென்றுவிட்டது - சோனியா பேச்சு

தெலுங்கானாவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ள சோனியா காந்தி, ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களோடு சேர்த்து ஐந்தாவதாக தெலுங்கானா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 7ம் தேதி தேர்தலும், டிசம்பர் 11ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. தெலுங்கானாவில் ஆளும் தெலுங்கானா ரஷ்டிர சமிதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பாஜக தனித்து போட்டியிடுகின்றது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று ஐதராபாத் நகருக்கு அருகில் உள்ள மெட்சால் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய சோனியா காந்தி, “தலித்கள், பழங்குடியின மக்கள், சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் மாணவர்களின் நலன்களை டிஆர்எஸ் அரசு புறக்கணித்துவிட்டது. முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தனக்காகவும், தனக்கு வேண்டியவர்களுக்காகவே பணியாற்றுகிறார். புதிதாக உருவாகியுள்ள தெலுகானாவை கைவிட்டுவிட்டார். தெலுங்கானா மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றி இருக்கிறார் என சொல்லட்டும்?.

முன்பு தெலுங்கானாவிற்கு பயணம் மேற்கொண்ட போது, வளர்ச்சிக்கு அடையாளமாக திகழ்ந்தது. ஆனால், தற்போது, அப்படி இல்லை. தற்போதையை ஆட்சியில் தெலுங்கானா இரண்டு அடி பின்னோக்கி சென்றுள்ளது” என்று கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com