அணிகள் இணைப்புக்காகவே விசாரணை ஆணையம் நாடகம்: புகழேந்தி

அணிகள் இணைப்புக்காகவே விசாரணை ஆணையம் நாடகம்: புகழேந்தி
அணிகள் இணைப்புக்காகவே விசாரணை ஆணையம் நாடகம்: புகழேந்தி

அணிகள் இணைப்புக்காக விசாரணை ஆணையம் என்கிற நாடகம் அரங்கேறிக் கொண்டிருப்பதாக கர்நாடக மாநில அதிமுக செயலாளரும், டிடிவி தினகரன் ஆதரவாளருமான புகழேந்தி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி நேற்று அறிவித்த நிலையில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். எனவே அதிமுக அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசிய டிடிவி தினகரன் ஆதரவாளரான புகழேந்தி, "நேற்றுத்தான் முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டார். ஆனால் இன்றைய தினம் இணைப்புக்காக பேசுகிறார் என்றால் இது எப்படி மக்கள் விருப்பம் ஆகும்? அப்படியென்றால் யாருக்காக இந்த அறிவிப்பு? யாருக்கு இந்த விசாரணைக் கமிஷன்..?  அணிகள் இணைப்புக்காக விசாரணைக் கமிஷன் என்கிற நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com