டிரெண்டிங்
எங்களை போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்: ஓபிஎஸ் பேச்சு!
எங்களை போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்: ஓபிஎஸ் பேச்சு!
எங்களை போன்ற நல்ல அரசியல்வாதிகளை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
விழாவில் பேசிய ஓபிஎஸ், “ஆசிரியர்களாகிய நீங்கள் எவ்வாறு திறமை படைத்தவர்களாக, மற்றவர்களுக்கு போதிக்கின்ற ஆற்றல் பெற்றவர்களாக உங்களுடைய தகுதியை வளர்த்திருக்கிறீர்களோ, அதுபோல உங்களது மாணவர்களை ஆசிரியர்களாக, மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக, எங்களைப் போன்ற நல்ல அரசியல்வாதிகளாக உருவாக்கி சமூகத்திற்கு சேவை ஆற்றிட வேண்டும்” என்றார்.