வாக்குச்சாவடியில் திடீர் மோதல்: போலீசார் தடியடி

வாக்குச்சாவடியில் திடீர் மோதல்: போலீசார் தடியடி
வாக்குச்சாவடியில் திடீர் மோதல்: போலீசார் தடியடி

ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடியில் தெலுங்கு தேசம் மற்றும் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. 

மக்களவைத் தேர்தல் இன்று தொடங்கி, மே 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியுள்ளது. 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அதோடு, ஆந்திரா, அருணாசல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைகளுக்கும் வாக்குப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. வாக்காளர் கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் புத்தலப்பட்டு தொகுதியில் இன்று காலை வாக்காளர்கள் வாக்களிக்க வந்துகொண்டிருந்தனர். அப்போது தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களுக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் திடீரென மோதல் ஏற்பட்டது. வாக்கு சேகரிப்பதில் ஏற்பட்ட இந்த மோதல் முற்றி, வாக்குச்சாவடி சூறையாடப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com