எந்தெந்த மாவட்டங்களில் முழுமையாக இன்று டாஸ்மாக் மூடல்?

எந்தெந்த மாவட்டங்களில் முழுமையாக இன்று டாஸ்மாக் மூடல்?
எந்தெந்த மாவட்டங்களில் முழுமையாக இன்று டாஸ்மாக் மூடல்?

கடந்த நாள்களில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. 

வாக்கு எண்ணிக்கையின்போது வார்டு வாரியாக பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்கள் & முகவர்கள் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு, பின் எண்ணிக்கை தொடங்கும். பின் வாக்குப்பதிவின் போது பதிவான வாக்குகளும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் காட்டப்படும் எண்ணிக்கையும் சரியாக இருக்கிறதா என்பது உறுதி செய்யப்பட உள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கையாக வாக்கு எண்ணும் மையங்களுக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவிலுள்ள டாஸ்மாக் கடைகளை இன்று மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்திய பிறகு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இந்த உத்தரவை நேற்று மாலை பிறப்பித்தார். தேவைப்பட்டால், மாவட்டம் முழுவதும் கூட டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டது. 

இதனையடுத்து சிவகங்கை, கன்னியாகுமரி, திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இங்கெல்லாம் மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com