தா.பாண்டியனுக்கு தமிழிசை கண்டனம்

தா.பாண்டியனுக்கு தமிழிசை கண்டனம்

தா.பாண்டியனுக்கு தமிழிசை கண்டனம்
Published on

தா.பாண்டியனை கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளதரராஜன்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி சென்றுள்ளார். அந்த தரிசனத்தை முடித்து கொண்டு வெளியே வந்த அவர் தமிழக நலனுக்காக வேண்டி கொண்டதாக கூறியிருந்தார். இந்நிலையில் தா. பாண்டியன் அவரது திருப்பதி பயணம் குறித்து கேலி பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு  தமிழிசை செளந்தரராஜன், தமிழக முதல்வர் அவர்கள் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்ததை கேலிபேசி மதவெறுப்பை காட்டும் கம்யூ.தா பாண்டியன் எனும் தாமஸ் பாண்டியனை கண்டிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சட்டத்திற்கு புறம்பாக பணம் வரும் ஓட்டைகளை மோடி அடைத்ததால் (தங்களின்?)பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் திருமா கூறுகிறார்கள் என்றும் தமிழிசை கருத்திட்டு உள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com