ரஜினியால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல மாற்றத்தை தர முடியும் - தமிழருவி மணியன்

ரஜினியால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல மாற்றத்தை தர முடியும் - தமிழருவி மணியன்

ரஜினியால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல மாற்றத்தை தர முடியும் - தமிழருவி மணியன்
Published on

ரஜினியால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல மாற்றத்தை தர முடியும் என காந்திய மக்கள் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும், கட்சி ஆரம்பிக்க வேண்டும், முதல்வராக வேண்டும் என்பதில் தீவிர ஆர்வம் கொண்டவர் தமிழருவி மணியன். இவர் ரஜினிகாந்தின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து அவ்வபோது பேட்டி அளித்து வருவார். ஆனால் சிலநாட்களாக ரஜினிகாந்துக்கு இவர் அளித்து வந்த ஆதரவில் விலகியதாக தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் தமிழருவி மணியன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “என்னுடைய அரசியல் வாழ்வு என்பது ரஜினி ஆதரவோடுதான் முடியும். ரஜினியால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல மாற்றத்தை தரமுடியும் என்பதை உறுதியாக நம்புவன் நான். மூன்று நாட்களுக்கு முன்னதாக கூட ரஜினியை சந்தித்து பேசினேன்.” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com