\
கருணாஸை அடுத்து தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு

கருணாஸை அடுத்து தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு

கருணாஸை அடுத்து தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு
Published on: 

கருணாஸை தொடர்ந்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுகவும் திமுகவும் தங்களது தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இறுதி செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது. இதனிடையே, கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வந்த முக்குலத்தோர் புலிப்படை கட்சி அங்கிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸால் அறிவிக்கப்பட்டது. அதேபோல் மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரியும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார்.

தொடர்ந்து, சற்று நேரத்திற்கு முன்பு முக்குலத்தோர் புலிப்படை கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் அஜய் வண்டையார், திமுகவின் ஆர்.எஸ் பாரதியிடம் கடிதம் வழங்கினார்.

இந்நிலையில், கருணாஸை தொடர்ந்து மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரியும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் ஒரு தொகுதியை திமுகவிடம் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com