கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கை பெறுவது சந்தேகம் தான்: தமிழிசை சூசகம்!

கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கை பெறுவது சந்தேகம் தான்: தமிழிசை சூசகம்!

கமல்ஹாசன் மக்கள் செல்வாக்கை பெறுவது சந்தேகம் தான்: தமிழிசை சூசகம்!
Published on

சினிமாத்துறை பிரபலத்தை வைத்து மக்கள் செல்வாக்கை பெற முடியுமா என்பது சந்தேகம் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

அடுத்த மாதம் 21ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவித்து, தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னை வளர்த்தெடுத்த சமூகத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருப்பதால் மக்களை சந்திக்கும் பயணத்தை, தான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து தொங்க இருப்பதாகவும் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் குறித்து கேள்விக்கு பதிலளித்துள்ள தமிழிசை, சினிமாத்துறை பிரபலத்தை வைத்து மக்கள் செல்வாக்கை பெற முடியுமா என்பது சந்தேகம் என்றும், பிற்காலத்தில் எந்த அளவிற்கு மக்களை அணுகுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இவ்வளவு நாள் திரைத்துறையில் இருந்துவிட்டு திடீரென அரசியலுக்கு வந்தால் மக்கள் ஆதரவு பெற முடியுமா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.   
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com