தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது.

தமிழ்நாடு முழுவதும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்திமுடித்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அனைத்து மாவட்ட நிர்வாகங்களுடன் தொடர்ந்து ஏற்கனவே காணொளி காட்சி வாயிலாக ஆய்வு கூட்டங்களை நடத்திய தேர்தல் ஆணையர் பழனிக்குமார், மாவட்டங்களுக்கு நேரில் சென்று தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. மேலும், வாக்குச்சாவடிகளை இறுதி செய்தல், வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com